ஜூன் 15ம் தேதி தேர்வு - டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அட்டவணை வெளியீடு..!
டி.என்.பி.எஸ்.சி., அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் மூலம் காலியாக உள்ள அரசுத் துறைகளின் பொறுப்புகளுக்கு ஆட்கள் நியமிக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், அடுத்தாண்டுக்கான தேர்வுத்திட்டம் (பிளானர்), இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி வெளியிடப்பட்டு, ஜூன் 15ம் தேதி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்., 25ம் தேதி வெளியிடப்பட்டு, ஜூலை 13ம் தேதி நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்டர்வ்யூ தேர்வு
அறிவிப்பு : மே 07ம் தேதி
தேர்வு: ஜூலை 21ம் தேதி
இன்டர்வ்யூ அல்லாத தேர்வு
அறிவிப்பு: மே 21ம் தேதி
தேர்வு: ஆகஸ்ட் 4ம் தேதி
டிப்ளமோ /ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான தேர்வு
அறிவிப்பு: ஜூன் 13ம் தேதி
தேர்வு: ஆகஸ்ட் 27ம் தேதி
குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள்
அறிவிப்பு; ஜுலை 15ம் தேதி
தேர்வு: செப்., 28ம் தேதி
குரூப் 5ஏ தேர்வு
அறிவிப்பு; அக்டோபர் 07ம் தேதி
தேர்வு : டிச., 21ம் தேதி
தேர்வு குறித்த மேலும் விபரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.