ஒரு கட்சி எம்.பி-க்கு ரூ.1.91 கோடி அபராதம் விதித்த மின்வாரியம்..!
சமாஜ்வாதி கட்சி எம்பி ஜியாவுர் ரஹ்மான் பார்க் வீடு உ.பி மாநிலத்தில் அமைந்துள்ளது. இவரது வீட்டில் 2 மின் மீட்டரில் மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநில மின்துறை சார்பில் ரூ.1.91 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது மின்சாரம் திருடியதற்காக ரூ.1.91 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அவரது வீட்டில் மின்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் உள்ள மின்சாதனப் பொருட்களை கணக்கெடுத்தனர்.
இவரது வீட்டில் 50க்கும் மேற்பட்ட எல்இடி பல்புகள், 3 ஸ்பிலிட் ஏசிகள், 2 குளிர்சாதன பெட்டிகள், 1 காபி மேக்கர், கீசர், மைக்ரோவேவ் ஓவன், டீப் ஃப்ரீசர் என பல பொருட்கள் உள்ளன. ஆனால், கடந்த 6 மாதங்களாக இவரது வீட்டில் மின்கட்டணம் பூஜ்ஜியமாக உள்ளது.அவர் தனது வீட்டிற்கு 2 கிலோவாட் மின் இணைப்பை எடுத்துள்ளதாக அம்மாநில மின்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மின்சுமை 16.5 கிலோவாட் ஆகும், 2 நாட்களுக்கு முன்பு நிறுவப்பட்ட புதிய ஸ்மார்ட் மீட்டர்கள் 5.5 கிலோவாட் மின்சுமைகளைக் காட்டுகின்றன. வீட்டில் 10 கிலோவாட் சோலார் பேனல் மற்றும் 5 கிலோவாட் ஜெனரேட்டர் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதன் மூலம் இவரது வீட்டில் 19 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் ஆனால் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சோலார் பேனல் வேலை செய்யவில்லை. அதன்படி மாவட்ட மின்வாரிய குழு தலைவராக உள்ள சமாஜ்வாடி எம்.பி.பார்க் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் எம்.பி.யின் தந்தை மாநில மின் துறை அதிகாரிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அரசு பணிக்கு இடையூறு செய்ததாக எம்.பி.பார்க் தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.