1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் ரேஷன் கடைகளுக்கு வந்த பயோமெட்ரிக் கருவிகள்- மக்கள் மகிழ்ச்சி..!!

biometric device
பொருட்கள் வாங்க முடியாமல் தவித்து வரும் குடும்ப அட்டைதாரர்களை கருத்தில் கொண்டு, நியாய விலைக் கடைகளில் பயோமெட்ரிக் கருவியில் முக்கிய அப்டேட் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் வெளியூர் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 34,793 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் வாயிலாக 2.24 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக குடும்ப அட்டையை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் நடைமுரை டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன.

அவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பது மற்றும் கைப்பேசி எண்ணை இணைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் பொருட்கள் வாங்குபவர்கள் நியாய விலைக் கடையில் பயோமெட்ரிக் கருவியின் கைரேகை வைத்தால் போதும். எளிதாக பொருட்களை வாங்கி வரலாம்.

வெவ்வேறு ஊர்களில் இருந்து தமிழகத்துக்கு வந்து வசிப்பவர்களுக்கு இந்த வசதி பேருதவியாக இருந்து வருகிறது. எனினும் பயோமெட்ரிக் கருவியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், பொருட்கள் எதையும் வாங்க முடியும், நுகர்வோருடைய அட்டைப் பதிவும் சிக்கலாகிவிடும்.

இல்லத்தரசிகளுக்கு மாதந்தோற்ம் ரூ. 1000  கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்துக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. வரும் செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்தநாளில் இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வருகிறது. அதற்காக வீடுதோறும் சென்று விண்ணப்பங்கள் விநியோகப்பட்டு, அவை பூர்த்தி செய்யப்பட்டு சிறப்பு முகாம்கள் வாயிலாக அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர்.

இதற்காக நியாய விலைக் கடைகளில் இருக்கும் பயோமெட்ரிக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த பெண், குடும்ப அட்டைக்கு உரியவரா என கைரேகை மூலம் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் நியாய விலைக் கடைகளில் பயோமெட்ரிக் கருவிகளே இல்லை.

இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் வசித்து வந்த உள்ளூர் குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமே பொருட்கள் வாங்க அனுமதிக்கப்பட்டனர். வெளியூர் பயனாளிகள் யாரும் பொருட்கள் வாங்க முடியாமல் போனது. இந்நிலையில் கலைஞர் உரிமைத் தொகைக்கான திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

அதன்காரணமாக எடுத்துச் செல்லப்பட்ட கருவிகள் அனைத்தும் மீண்டும் நியாய விலைக் கடைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனால் வெளியூர் குடும்பத்தினரும் பொருட்களை வாங்க முடியும். இந்த தகவலால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Trending News

Latest News

You May Like