1. Home
  2. தமிழ்நாடு

டைட்டிலே தீயாய் இருக்கே: கொண்டாட்டத்தில் ஏகே பேன்ஸ்.!

1

அஜித்தின் 'ஏகே 63' படம் குறித்த அட்டகாசமான அப்டேட் வெளியாகியுள்ளது.

அஜித் தற்போது 'விடாமுயற்சியில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஷுட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. ஆனால் இந்த செய்தி படக்குழுவினர் உறுதிப்படுத்தாமலே இருந்தது. 

இந்நிலையில் 'ஏகே 63' படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இய்க்கத்த்தில் அஜித் நடிக்கும் இப்படத்திற்கு 'குட் பேட் அக்லி' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. புஷ்பா உள்ளிட்ட பல பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்த பிரபல மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அத்துடன் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

நீண்ட காலமாக அஜித் பட அப்டேட்டிற்காக தவம் கிடந்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு அமர்க்களமான ட்ரீட்டாக அமைந்துள்ளது. மேலும், இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Trending News

Latest News

You May Like