திருவொற்றியூர் கட்டட விபத்து – உடனடியாக நிவாரணம் வழங்கிய முதலமைச்சர்!!
திருவொற்றியூரில் வீடுகள் இடிந்து விழுந்து பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக மாற்ற வீடுகள் வழங்கப்படும் என்று அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாலையே தலா ஒரு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கினார்.
திருவொற்றியூர் பகுதியில் அரிவாக்குளம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து அங்கு வசித்து வந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்நிலையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்தது.
இந்த விபத்தினால் 28 வீடுகள் தரைமட்டமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காலையில் கட்டடத்தில் அதிர்வு இருந்ததால் மக்கள் வெளியேறினர். இதன் காரணமாக பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
வீடுகள் இடிந்து விழுந்து பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக மாற்ற வீடுகள் மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பாதிக்கப்பட்ட மக்கள், பாதிப்பிலிருந்து மீண்டும் புதிய வாழ்க்கையைத் துவங்க 24 குடும்பங்களுக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்று மாலையே அமைச்சர் தா.மோ.அன்பரசன் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிவாரணத் தொகையை வழங்கினார்.
இதுபோன்ற விபத்து ஏற்படாத வகையில் பழைய குடியிருப்புகளின் விபரங்களைச் சேகரிக்கவும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் முதல்வர் அறிவுறுத்தினார்.
newstm.in