திருவண்ணாமலை பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை!
இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவை விட்டு திருவண்ணாமலையில் ஒன்பது நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அந்த மாவட்டத்தில் உள்ள 156 பள்ளிகளுக்கு டிசம்பர் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அளிப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். தீபத் திருவிழா பாதுகாப்புப் பணிக்காக பிற மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் காவலர்கள் இந்தப் பள்ளிகளில் தங்க உள்ளனர் என்பதால் இந்த விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்றும் முதன்மைக் கல்வி அலுவலர் கூறியுள்ளார்.
.png)