ராஜினாமா செய்தார் திருப்பூர் சுப்பிரமணியம்..!
தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் சங்கத்தின் தலைவராக இருக்கும் திருப்பூர் சுப்பிரமணியத்திற்குச் சொந்தமான திருப்பூர் சக்தி சினிமாஸ் திரையரங்கில் சல்மான் கான் நடித்த டைகர் 3 படத்திற்கு காலை 7 மணிக்கும், இரவு 11.50 மணிக்கும் கடந்த இரண்டு நாட்களில் சிறப்புக் காட்சிகள் நடத்தப்பட்ட விவகாரத்தில் உரிய அனுமதியின்றி 6 காட்சிகளைத் திரையிட்ட அத்தியேட்டருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில்,தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் மற்றும் கோவை ,ஈரோடு நீலகிரி, திருப்பூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளார்கள் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருப்பூர் சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்பவும் எனது சொந்தவே வேலை காரணமாக நமது சங்க தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன். இதுகாறும் ஒத்துழைப்பு கொழுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.