1. Home
  2. தமிழ்நாடு

சூடு பிடிக்கும் திருப்பூர் வரதட்சணை வழக்கு..ஐ.ஜியிடம் முக்கிய ஆதாரத்தை கொடுத்த ரிதன்யா தந்தை..!

1

வரதட்சணை கொடுமையால் திருமணமான 78 வது நாளிலேயே புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்டு சம்பவம் திருப்பூர் மாவட்டத்தை உலுக்கியது. மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக தனது ஈஸ்வரமூர்த்திக்கு whatsapp ஆடியோ ஒன்றை அனுப்பிவிட்டு ரிதன்யா உயிரிழந்து உள்ளார்.

அந்த ஆடியோவில், திருமணம் ஆன 10 நாட்களிலேயே மீதமுள்ள 200 சவரன் நகை எங்கே கேட்டு தனது மாமியார் கொடுமைப்படுத்தியதாகவும், தன்னுடைய மகனுக்கு வேலை பார்த்து கொடுக்கும்படி கூறியதாக தொடர்ந்து தொல்லை கொடுத்தாக கூறியிருந்தார். மேலும் தன்னுடைய கணவர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக அழுதபடி கூறியிருந்தார். குறிப்பாக நான் பாத்ரூமிற்கு சென்றால் கூட பின்னாடியே வருவார் என்று கூறியிருந்தார்.இதனை என்னால் சகித்துக் கொள்ள முடியாது. எனக்காக அம்மா அப்பா இருவரும் கஷ்டப்பட்டு உள்ளீர்கள்.. இதற்கு மேலேயும் உங்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை என்று கூறியுள்ளார். கடைசியாக தன்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி, தனது முடிவிற்கு காரணம் கணவர் கவின்குமார் ,மாமியார் சித்ராதேவி, மாமனார் ஆகியோர் தான் என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் ரிதன்யாவின் மாமியார் சித்ராதேவி, கணவர் கவின்குமார்,மாமனார் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோரி கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்பொழுது இந்த வழக்கு இருந்து விடுவிக்க கோரி கவின்குமார் மற்றும் அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி மற்றும் சித்ராதேவி ஆகியோர் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.ஆனால் இந்த மனுவை திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் ரிதன்யா தற்கொலை வழக்கை பாலியல் துன்புறுத்தல் பிரிவிலும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோவை மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் மகள் ரிதன்யாவை அவருடைய கணவர் கவின்குமார் பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளதாகவும் , குறிப்பாக இயற்கைக்கு மாறான வழியில் ஈடுப்பட்டதாக தெரிவித்து உள்ளார். மேலும் தனது மகள் ரிதன்யாவின் பிரேதப்பரிசோதனை அறிக்கை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டு உள்ளார்.

Trending News

Latest News

You May Like