நாளை திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..!
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரர் நாயனார் தேவார பதிகம் பாடி உயிருடன் மீண்டும் உயிர்ப்பித்து எழச் செய்த திருத்தலமாகவும் பிரசித்தி பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் விளங்குகிறது.
இக்கோயிலில் நாளை அதாவது, வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. இதனையொட்டி, குடமுழுக்கு விழாவில் திருப்பூர் மாவட்ட மக்கள் பங்கேற்கும் வகையில், உள்ளூர் விடுமுறை வழங்கக் கோரி மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற பிப்ரவரி 2ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.