1. Home
  2. தமிழ்நாடு

திருப்பதி கோவிலில் குடமுழுக்கு செய்ய முடிவு!

Q

தரமற்ற நெய்யில் விலங்குகளின் கொழுப்பைக் கலந்து திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தன்மையை முந்தைய ஆட்சியாளர்களான ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி சீரழித்து விட்டதாகச் சந்திரபாபு நாயுடு முக்கிய குற்றச்சாட்டை வெளியிட்டு இருந்தார்.
அதோடு திருப்பதி ஆலயத்தில் தயாரிக்கப்படும் லட்டுகளில் உள்ள கலவைகளை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டார். அதன்படி குஜராத் ஆய்வகத்தில் சோதனை நடத்தப்பட்டது. 5 கட்டங்களாகச் சோதனை நடந்தது.
அப்போது திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது ஆந்திர அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது.
இந்நிலையில், இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, ஏழுமலையான் கோவிலுக்குத் தோஷத்தை போக்க சம்ரோஷணம் செய்ய நிர்வாகம் ரீதியாக ஆலோசனை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விலங்குக் கொழுப்பு கலந்த நெய்யில் லட்டு தயாரித்ததால் கோவிலுக்கு மிகப்பெரிய பாவமும், தோஷமும் ஏற்பட்டதாக அர்ச்சகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சம்ரோஷணம் என்றால் குடமுழுக்கு செய்து கோயிலைத் தூய்மைப்படுத்தும் நிகழ்வு எனக் கூறப்பட்டுள்ளது. இதனால், திருப்பதி ஏழுமலையான் கோவிலுகு்கு விரைவில் குடமுழுக்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like