தமிழகத்தில் திருப்பதி கோவில்! பூமிபூஜையைத் தொடங்கி வைத்தார் முதல்வர்!

தமிழகத்தில் திருப்பதி கோவில்! பூமிபூஜையைத் தொடங்கி வைத்தார் முதல்வர்!

தமிழகத்தில் திருப்பதி கோவில்! பூமிபூஜையைத் தொடங்கி வைத்தார் முதல்வர்!
X

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் 4 ஏக்கர் பரப்பளவில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி கோவில் கட்டுவதற்கான பூமிபூஜையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். முன்னதாக கோ பூஜை, சங்கு ஸ்தாபனம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதல்வர் பழனிசாமிக்கு, பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. வடக்கு மண்டல ஐ.ஜி., சங்கர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Tags:
Next Story
Share it