திருப்பதி செல்வோர் கவனத்திற்கு : நாளை முதல் சிறப்பு தரிசனம் ரத்து..!

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் அக்டோபர் 15ஆம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்கவுள்ளது. இதனை முன்னிட்டு சிறப்பு தரிசன சேவை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே புரட்டாசி மாதம் என்பதால் சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பலரும் கோயிலுக்கு தரிசனத்திற்காக வருகை புரிபவர்கள் அதனால் அனைவரும் சாமி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதனால் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் விரைவில் சுவாமி தரிசனம் செய்ய முடியும். இந்த பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக ஆந்திர மாநில போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. சென்னையில் இருந்து மட்டும் திருப்பதிக்கு மட்டும் 90 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.