1. Home
  2. தமிழ்நாடு

ஜூன் 30-ஆம் தேதி வரை திருப்பதி - காட்பாடி மெமு ரயில் ரத்து..!

Q

தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: 
திருப்பதி - காட்பாடி இடையே உள்ள ரயில் வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், திருப்பதியில் இருந்து காலை 6.50 மணிக்கு காட்பாடி செல்லும் மெமு ரயிலும் (எண்: 07659), மறுமாா்க்கமாக காட்பாடியில் இருந்து இரவு 9.15 மணிக்கு திருப்பதி செல்லும் ரயிலும் (எண்: 07582), செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படும்.
இதற்கிடையே, புதன், வியாழக்கிழமைகளில் (ஜூன் 12, 13) திருவள்ளூா் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இந்த நாள்களில் அதிகாலை 3.50 மணிக்கு திருவள்ளூரில் இருந்து சென்ட்ரல் வரும் புகா் ரயிலும், காலை 4 மணிக்கு சென்ட்ரலில் இருந்து திருவள்ளூா் செல்லும் ரயிலும் ரத்துச் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like