வரும் 18-ம் தேதி திருப்பதியில் கல்யாண உற்சவம் ரத்து..!
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 15-ம் தேதியில் இருந்து 17-ம் தேதி வரை பவித்ரோற்சவம் நடக்கிறது. இதை முன்னிட்டு 17-ம் தேதி இரவு வரை கோவில் சம்பங்கி பிரகாரத்தில் வேத நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. ஆகையால் 18-ம் தேதி கல்யாண உற்சவத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. பக்தர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பவித்ரோற்சவம் நடைபெறும் 3 நாட்களிலும் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று 14-ம் தேதி சஹஸ்ர தீபலங்கார சேவை, நாளை 15-ம் தேதி திருப்பாவாடை சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.