1. Home
  2. தமிழ்நாடு

திருப்பதி தேவஸ்தானம் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு : இனி பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது..!

Q

திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு ஆந்திரா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும்தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நாட்டிலேயே பணக்கார கோயிலாக திருப்பதி இருந்துவருகிறது.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருமலை திருப்பதிதேவஸ்தானம் பக்தர்களின் விஐபி தரிசனத்தில் சில மாற்றங்களை அமல்படுத்தியுள்ளன. அதன்படி திருப்பதிஏழுமலையான் கோயிலில் தரிசனத்திலோ அல்லது தங்கும் இடத்திலோ இனி எந்த பரிந்துரை கடிதங்களும்ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக விஐபி தரிசனத்தில் மக்கள் பிரதிதிகளான எம்.பி., எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களின் பரிந்துரைகடிதங்கள் ஏற்கப்படும். மேலும் பரிந்துரை கடிதங்கள் மூலம் கோவிலில் தங்கும் வசதி கொடுக்கப்படும். ஆனால்இப்போது தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் பரிந்துரை கடிதங்கள் இனி ஏற்கப்படாது எனதெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், விஐபிக்கள் நேரில்வந்தால் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கு மட்டும் சிறப்பு தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும்தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் ஜுன் மாதம் வரை இந்த நடைமுறைகள் பின்பற்றப்படும் என திருப்பதிகோவிலை நிர்வகித்து வரும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது

Trending News

Latest News

You May Like