1. Home
  2. தமிழ்நாடு

ஒரு லட்சம் லட்டுக்களை அனுப்பிய திருப்பதி தேவஸ்தான நிர்வாகம்..!

1

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா நாளை 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் அயோத்தி ராமர் கோவிலுக்கு பல்வேறு பரிசுப் பொருட்களையும், நன்கொடைகளையும் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு வரும் பக்தர்களுக்காக ஒரு லட்சம் லட்டுக்கள் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட்து. இதன்படி, தேவஸ்தான நிர்வாகத்தின் சார்பில் ஒரு லட்சம் லட்டுக்கள் தயார் செய்யப்பட்டு, சாலை மார்க்கமாக அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  

Trending News

Latest News

You May Like