1. Home
  2. தமிழ்நாடு

சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்தன் எதிரொலி- திருப்பதி தேவஸ்தானம் அதிரடி முடிவு..!!

tirupati temple
திருப்பதியில் சிறுத்தை தாக்குதலுக்கு ஆளாகி 6 வயது சிறுமி உயிரிழந்ததை அடுத்து, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை தேவஸ்தானம் அமைப்பு ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திராவைச் சேர்ந்த 6 வயது சிறுமி லக்‌ஷிதா, பெற்றோருடன் கடந்த வெள்ளிக்கிழமை திருப்பதி கோயிலுக்கு சென்றிருந்தார். அங்குள்ள அலிபிரி மெட்டு பகுதியில் நடைப் பயணமாக மாலை 4.30 மணியளவில் கோயிலை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தார்.

இரவு 7 .30 மணியளவில் நரசிம்ம சுவாமி கோயில் அருகே சென்றபோது, சிறுமி லக்‌ஷிதா மாயமானார். உடனடியாக பெற்றோர் அளித்த புகாரில், போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமராக்களை வைத்து ஆய்வு செய்தனர். அதில் சிறுமி லக்ஷிதாவை சிறுத்தை இழுத்து சென்றது தெரியவந்தது. 

சி.சி.டி.வி காட்சிகளை வைத்து இரவு முழுவதும் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. காலை 6 மணியளவில் சிறுமி உயிரிழந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் திருப்பதி செல்லும் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. 

இந்த விவகாரம் தொடர்பாக திருப்பதி தேவஸ்தானத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர். அலிபிரி மெட்டு மற்றும் ஸ்ரீவாரி மெட்டு  பகுதிகளை மதியம் 2 மணிக்குமேல் மூடிவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. திருமலைக்கு குழந்தைகளுடன் நடந்து செல்வோர் அவர்களை தனியாக விடக்கூடாது என்கிற கட்டுப்பாட்டையும் திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று திருமலைக்குச் செல்பவர்கள் எப்போதும் கூட்டமாகவே செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இத்துடன் மலைப்பாதையில் பாதுகாவலர்கள் அதிகரிப்பு, மிருகங்கள் நடமாடும் பகுதிகளில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள், அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு பாதைகளில் 10 மீட்டருக்கு ஒரு பாதுகாவலர்கள்,  மேலும் மலைப்பாதைகளில் 500 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும் உள்ளிட்ட நடவடிக்கைகளை திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்டுள்ளது. 

இதனிடையே சிறுத்தை தாக்கி உயிரிழந்த சிறுமி லக்‌ஷிதா குடும்பத்துக்குதிருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ. 5 லட்சம் வனத்துறை சார்பில் ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. என்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி  செய்தியாளர்களிடம் கூறினார். 
 

Trending News

Latest News

You May Like