1. Home
  2. தமிழ்நாடு

திருப்பதி புறப்பட்டது ஆண்டாள் சூடிய மாலை..!

திருப்பதி புறப்பட்டது ஆண்டாள் சூடிய மாலை..!

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நடைபெறும்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாளுக்கு பிரமாண்டமான மாலை அணிவிக்கப்பட்டு, அந்த மாலை திருப்பதியில் ஏழுமலையான் சீனிவாச பெருமாள் அணிந்துகொள்ள கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

திருப்பதி புறப்பட்டது ஆண்டாள் சூடிய மாலை..!
அதன் படி, இந்த ஆண்டுக்குரிய விழா இன்று (9ம் தேதி) கோயில் வளாகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. இதற்காக, ஆண்டாளுக்கு பிரமாண்டமான மாலை தயார் செய்யப்பட்டு அணிவிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, ஆண்டாள் சூடிய மாலை மற்றும் பட்டு வஸ்திரம், கிளி ஆகியவை பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட கூடை ஒன்றில் கொண்டு செல்லப்பட்டது.

வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு கோயிலில் வழிபட அனுமதி இல்லாததால், அர்ச்சகர்களும், ஆண்டாள் கோயில் நிர்வாகிகள் மட்டுமே இந்த மாலை கொண்டுசெல்லும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவிலி. ஆண்டாள் சூடிய பிரம்மாண்ட மாலை திருப்பதி புறப்பட்டது- Dinamani
ஆண்டாள் சூடிய மாலை கோயிலில் இருந்து மாடவீதி வழியாக மேளம், தாளம் முழங்க கொண்டு செல்லப்பட்டு பின்னர் திருப்பதிக்கு புறப்பட்டது. இங்கிருந்து கொண்டு செல்லப்படும் மாலை, திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் திருநாளில் திருப்பதி ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும் என அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like