1. Home
  2. தமிழ்நாடு

திருப்பதி தரிசன டிக்கெட் வெளியிடப்படும் தேதி அறிவிப்பு..!

Q

திருப்பதி கோவிலில் நாள்தோறும் சராசரியாக 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிகின்றனர். மேலும் விசேஷ நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக திருப்பதி கோவில் தேவஸ்தான நிர்வாகம் அவ்வப்போது சில கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது.
இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு தரிசன சேவைகளை வழங்கி வருகிறது. இதன் மூலம் 300 ரூபாய் கட்டண தரிசனம், ஸ்ரீவாரி இலவச தரிசனம், டைம் ஸ்லாட்டட் தரிசனம், ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் தரிசனம், ஆன்லைன் லக்கி டிப் தரிசனம் போன்ற பல சேவைகளை அளித்து வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய மூன்று மாதங்களுக்கு முன்பு டிக்கெட்டுகள் வெளியிடப்படவுள்ளது. மேலும் இந்த டிக்கெட்கள் தேவஸ்தானத்தின் இணையதள பக்கத்தில் வெளியாகும். இதன் அடிப்படையில் தான் தற்போது வருகிற ஜூன் மாத தரிசனத்துக்கான டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் (Tirupati Darshan Ticket Release Date) திருப்பதி திருமலை தேவஸ்தானம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய மூன்று மாதங்களுக்கு முன்பே தேவஸ்தானத்தின் இணையதள பக்கத்தில் டிக்கெட்டுகளும் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் ஜூன் மாத தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு டிக்கெட்டுகள் எப்போது வெளியிடப்பட உள்ளது என்பது குறித்த தகவலை திருப்பதி திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
இந்த தகவலின் படி திருமலை ஆர்ஜித சேவைகளான சுப்ரபாத சேவை, அர்ச்சனை சேவை, தோமால சேவை, அஷ்டதல பட பத்மாராதணா ஆகியவற்றுக்கான ஜூன் மாத லக்கி டிப் முன்பதிவு வரும் 18 ஆம் தேதி முதல் மார்ச் 20 ஆம் தேதி காலை 10 மணி வரை திறந்திருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மார்ச் 22ம் தேதி மதியம் 12 மணிக்குள் பணத்தை செலுத்தி டிக்கெட்டுகளை இறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வரும் ஜீன் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் வரும் மார்ச் 25-ம் தேதி வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like