1. Home
  2. தமிழ்நாடு

திருப்பதியில் வரும் 12-ம் தேதி அனைத்து கட்டண சேவைகளும் ரத்து..!

1

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற12ஆம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. எனவே அன்று சகஸ்ர தீப அலங்கார சேவையை தவிர அனைத்து கட்டண சேவைகளையும் தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்துள்ளது. தீபாவளி தினமான வருகிற 12ஆம் தேதி காலை 7:00 மணிக்கு ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்கவாசல் அருகே ஏழுமலையானின் தீபாவளி ஆஸ்தானம் ( தர்பார்) நடைபெறும்.

ஆஸ்தானத்தை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கோவிலில் இருக்கும் தங்கவாசல் எதிரே உள்ள கருடாழ்வார் மண்டபத்தில் எழுந்தருள்வார். உடன் ஏழுமலையானின் சேனாதிபதியும் அங்கு எழுந்தருள்வார். தொடர்ந்து உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகளுடன் ஆஸ்தானம் (தர்பார்) நடைபெறும். ஆஸ்தானத்தை முன்னிட்டு அன்று மாலை திருப்பதி மலையில் நடைபெறும் சகஸ்ர தீப அலங்கார சேவை தவிர மற்ற அனைத்து கட்டண சேவைகளையும் தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

Trending News

Latest News

You May Like