இரண்டு வருடங்களில் இலங்கையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டப்படும்..!
திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையான் கோவில் மட்டுமின்றி திருப்பதியிலும் ஏராளமான கோவில்களை நிர்வகித்து வருகிறது. இதேபோல் தமிழகத்திலும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல்வேறு பெருமாள் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் டெல்லி, உத்தரகாண்ட், ஹைதராபாத், பெங்களூரூ, ஹரியானா, ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தேவஸ்தானத்துக்கு சொந்தமான பெருமாள் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.
அந்த வகையில் தற்போது இலங்கையிலும் திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் கட்டப்படவுள்ளது. இலங்கையின் வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் முன்னேஸ்வரத்தில் இந்தி்யாவின் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆலய கட்டிடப்பணிகள் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக TST அறக்கட்டளை நிர்வாகி கே.சசிகுமார் தெரிவித்துள்ளார்.
இன்னும் இரண்டு மாதங்களில் இதற்கான அடிக்கல் நாட்டப்படும் என்றும் இரண்டு வருடங்களில் கோவில் கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.