1. Home
  2. தமிழ்நாடு

திருப்பதி ஏழுமலையான் கோவில் புஷ்கரணி ஒரு மாதம் மூடல்..!

1

TTD வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதம் 24-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. அதையொட்டி கோவில் அருகில் உள்ள புஷ்கரணியில் பழுதுப் பார்ப்பு மற்றும் சீரமைப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி வரை ஒரு மாதம் புஷ்கரணி மூடப்படுகிறது.

எனவே ஒரு மாத காலத்தில் புஷ்கரணியில் ஆரத்தி இருக்காது. பக்தர்கள் புஷ்கரணியில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும். எனினும், பழுதுப்பார்ப்பு மற்றும் சீரமைப்பு பணிகளை முன்கூட்டியே முடிக்க தேவஸ்தானம் நீர் வழங்கல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like