1. Home
  2. தமிழ்நாடு

திருப்பதி கோயிலில் பிராங்க் வீடியோ எடுத்த TTF வாசன் மீது திருமலை போலீசார் வழக்கு பதிவு..!

1

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன், சாமி தரிசனத்திற்காக சில தினங்களுக்கு முன் திருமலை திருப்பதி சென்றிருந்தார். அப்போது பக்தர்களை ஏமாற்றுவது போல் பிராங்க செய்து வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவில், சாமி தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் மூன் கோயில் ஊழியர்கள் போல் தோன்றிய டிடிஎப் வாசன் நண்பர் காத்திருப்பு அறையின் கதவை திறக்க முயல்கின்றனர்.

தங்களது காத்திருப்பு நேரம் நிறைவடைந்து விட்டது. அறைக் கதவு திறக்கப்படுகிறது என நினைத்த பக்தர்கள் அனைவரும் உடனடியே எழுந்து நின்று கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு பக்தர்களின் பரவச அலை வீசத் தொடங்கியது.

இந்த வீடியோவை திருப்பதி ஃபன்னி வீடியோ என்ற தலைப்பில் தனது சமூக வலைதள பக்கத்தில் டிடிஎப் வாசன் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில், பல்வேறு தரப்பினரும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக திருப்பதி தேவஸ்தனம் போர்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.

டிடிஎப் வாசனின் செயலுக்கு கணடனம் தெரிவித்துள்ள திருப்பதி தேவஸ்தனம் போர்டு, அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக டிடிஎப் வாசன் மீது போலீசில் புகார் அளிக்க உள்ளதாக தேவஸ்தன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினர் டி டி எப் வாசன் சாமி கும்பிட சென்ற நாளன்று சாமி தரிசன வரிசைகளில் பொருத்தப்பட்டு இருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து அவற்றின் அடிப்படையில் திருமலை முதலாவது நகர காவல் நிலையத்தில் மீது புகார் அளித்தனர்.இதனை தொடர்ந்து போலீசார் அவர் மீது (வழக்கு எண் 72/2024) செக்சன் 299 அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சம்மன் அனுப்பி உள்ளனர்.

Trending News

Latest News

You May Like