டிக்டாக் ஆப்பிற்கு ஆப்பு... ஜி.பி.முத்து என்ன சொல்கிறார் தெரியுமா?

டிக்டாக் ஆப் தடையால் வேதனையில் இருக்கும் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து, நட்புகளை இழந்துவிட்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
டிக்டாக் உள்ளிட்ட சீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால் டிக்டாக்கில் பொழுதை போக்கியவர்கள், டிக்டாக்கே வாழ்க்கையாக இருந்தவர்கள் தற்போது மிகுந்த வேதனையில் உள்ளனர். அந்த வகையில் டிக் டாக் பிரபலமான ஜி.பி.முத்து, கண்ணீருடன் வேதனை தெரிவித்துள்ளார். டிக்டாக் ஆப்பை எடுத்துவிட்டது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்றும் நண்பர்கள் நிறையபேரை இழந்துவிட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த டிக்டாக்கை வைத்து உலகம் முழுவதும் பிரபலமானேன் என்று கூறியுள்ள ஜி.பி.முத்து, அது இல்லாதது மனசு கஷ்டமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
newstm.in