1. Home
  2. தமிழ்நாடு

அதிமுகவிறக்கு ஷாக் கொடுத்த டைம்ஸ் நவ் எக்சிட் போல்..!

1

தேர்தலின் போது வாக்களித்துவிட்டு வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியே வரும் வாக்காளர்களிடம் அவர்களின் விருப்பத்தைக் கேட்டு அவர்கள் எந்த கட்சி அல்லது வேட்பாளருக்கு வாக்களித்தார்கள் என்பதை பதிவு செய்து அந்த தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என கணிக்கப்பட்டு வாக்குப்பதிவு முடிவடைந்த உடன் அதனை கருத்துக்கணிப்பாக முன்னணி ஊடக நிறுவனங்கள் வெளியிடுவது வழக்கம். அதுதான் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு.

தமிழ்நாட்டில் மும்முனை போட்டி நிலவியது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் 39 இடங்களில் 38 இடங்களை கைப்பற்றிய திமுக கூட்டணி, தற்போது அனைத்து இடங்களையும் கைப்பற்ற வேண்டும் என பணியாற்றியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுக்க சுற்றுப் பயணம் சென்று பரப்புரை மேற்கொண்டு வந்தார்.கடந்த மக்களவைத் தேர்தலை சேர்ந்து சந்தித்த அதிமுகவும், பாஜகவும் தனித் தனி அணிகளாக பிரிந்தன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கால் பதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜக கூட்டணி தேர்தல் பணியாற்றியது. என் மண் என் மக்கள் யாத்திரை மூலம் அண்ணாமலை ஆறு மாதங்களுக்கு முன்பே பரப்புரையை தொடங்கினார். அத்துடன், பாமக, அமமுக, ஓபிஎஸ் அணி, தமாக என வலுவான கூட்டணியையே பாஜக அமைத்தது.

தேர்தலுக்குப் பிந்தையை கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. டைம்ஸ் நவ் - ETG வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 34 இடங்களில் வெற்றிபெறும் என்றும், அதிமுக இரண்டு இடங்களில் வெற்றிபெறும் என்றும் கணித்துள்ளது. அதே சமயம் பாஜக கூட்டணி 3 இடங்களில் வெல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதாவது அதிமுகவை விட பாஜக ஓர் இடத்தில் அதிகமாக வெற்றிபெறும் என டைம்ஸ் நவ் கணித்துள்ளது.

வாக்குகளைப் பொறுத்தவரை திமுக கூட்டணி 52 சதவிகிதமும், அதிமுக கூட்டணி 25 சதவிகிதமும், பாஜக கூட்டணி 15 சதவிகிதமும் பெறும் என்றும், இதர கட்சிகள் 8 சதவிகிதம் வரை பெறுவார்கள் என்றும் டைம்ஸ் நவ் கணித்துள்ளது.

அதே போல் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் மிக முக்கியமான மாவட்டமான ஈரோட்டில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது குறித்த தந்தி டிவி கருத்துக்கணிப்பு வெளியேற்றுள்ளது.திமுகவிற்கு 43 சதவீதம்,அதிமுகவிற்கு 35 சதவீதம், தாமாகவிற்கு 11 சதவீதம் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பு அறிவித்துள்ளது.

மதுரை தொகுதியில் முன்னிலையில் இருப்பது யார் என்ற கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது அதில் திமுகவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 35 சதவீதத்துடன் முன்னிலையில் உள்ளது.

தந்தி டிவி வெளியிட்டுள்ள இந்த கருத்துக்கணிப்பில், சிபிஎம் 35 சதவீதம்,அதிமுக 29 சதவீதம்,பாஜக 23 சதவீதம் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

Trending News

Latest News

You May Like