உச்சகட்ட பதற்றம் : ஜம்மு காஷ்மீரில் டிபன்பாக்ஸ் குண்டுகள் கண்டுபிடிப்பு..!
பயங்கரவாதிகள் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதைத் தொடர்ந்து, இந்திய ராணுவமும் பயங்கரவாதிகளை ஓடுக்கும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சூரன்கோட் என்ற இடத்தில் ராணவ வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதியில் 5 வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை ராணுவ வீரர்கள் பறிமுதல் செய்தனர். அப்போது, அந்த வெடிகுண்டுகள் டிபன்பாக்ஸ் பக்கெட் வகை வெடி குண்டுகள் என்பது தெரியவந்தது. இதை அடுத்து, அந்த குண்டுளை ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர்.
மேலும், இந்தப் பகுதியில் வெடிகுண்டுகளை வைத்தவர் யார்? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தற்போது, சூரன்கோட் பகுதியில் டிபன்பாக்ஸ், பக்கெட் வெடி குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
.png)