முன்பதிவு துவங்கிய 10 நிமிடத்தில் டிக்கெட் விற்று தீர்ந்தது..!
தைப்பொங்கலை முன்னிட்டு தங்கள் சொந்த ஊருக்கு வந்து செல்ல சென்னையிலிருந்து இயங்கும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு செய்துள்ளதால், தற்போது வெயிட்டிங் லிஸ்ட் நிலை காணப்படுகிறது. சிறப்பு ரயில்களிலும் இதே நிலை தொடர்கிறது.
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (ஜன.,10) காலை 8 மணிக்கு துவங்கியது. முன்பதிவு துவங்கிய 10 நிமிடத்தில் டிக்கெட் விற்று தீர்ந்தது. தட்கல் முறையில் டிக்கெட் பெறுவதற்கு பயணிகள் முனைப்பு காட்டி வருகின்றனர். நாளை பயணம் செய்ய இன்று காலை 10 மணிக்கு தட்கலில் முன்பதிவு செய்யலாம். சிறப்பு ரயில்கள் நாளை முதல் இயக்கப்படுகின்றன.
எனவே ஜன. 11, 12, 13 ல் சென்னை, கோவையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கும், மறு மார்க்கத்தில் ஜன. 17,18, 19 ல் நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரையில் இருந்து சென்னை, கோவைக்கும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே நிர்வாகம் இயக்க வேண்டுமென தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.