விஷாலுக்கு ஜோடி சேரும் டிக்டாக் பிரபலம்!
விஷாலுக்கு ஜோடி சேரும் டிக்டாக் பிரபலம்!

விஷால், ஆர்யா இணைந்து நடித்துவரும் புதிய படத்தில் டப்ஸ்மாஷ் புகழ் மிருனாலினி ரவி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான மிருனாலினி ரவி, கடைசியாக சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான சாம்பியன் என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து, சசிகுமாருக்கு ஜோடியாக எம்.ஜி.ஆர் மகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், விஷால் ஆர்யா படத்தில் இணைந்து நடிப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.
இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். அவன், இவன் படத்திற்குப் பிறகு நடிகர் விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் பெயரிடப்படாத இப்படம், விஷாலின் 30வது படமாகவும் ஆர்யாவின் 32வது படமாகவும் வெளியாகவிருக்கிறது
நல்ல நண்பர்களான ஆர்யா – விஷால் ஆகிய இருவரும் 9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளனர். விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார்.
newstm.in