தைராய்டு சிகிச்சை.. கர்ப்பிணி பெண்களுக்கு எச்சரிக்கை !!

தைராய்டு சிகிச்சை.. கர்ப்பிணி பெண்களுக்கு எச்சரிக்கை !!

தைராய்டு சிகிச்சை.. கர்ப்பிணி பெண்களுக்கு எச்சரிக்கை !!
X

கருவுற்ற பெண்களுக்கு முதலில் தைராய்டு பரிசோதனை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவர். காரணம் தாயிடமிருந்து சுரக்கும் தைராக்சின் ஹார்மோன் குழந்தைக்கும் சம அளவில் கிடைக்க வேண்டும் என்பதற்காக. ஒருவேளை அப்படி சுரக்கவில்லை எனில் குழந்தைக்கு சில குறைபாடுகள் ஏற்படலாம் என்பதற்காக.

தைராய்டு உள்ள பெண்களுக்கு தைராக்ஸின் சுரப்பு குறைவாகவே இருக்கும். எனவேதான் அதை அதிகரிக்க மகப்பேறு மருத்துவர்கள் தைராய்டு உள்ள கர்ப்பிணிகளை உணவில் அதிக கவனம் செலுத்தச் சொல்வார்கள்.

ஆனால் கர்ப்பிணிகளுக்கு தைராய்டு பரிசோதனையால் மருத்துவர்கள் தேவையற்ற சிகிச்சை அளிப்பதாக கனடாவில் நடந்த ஆய்வில் கூறப்பட்டுளள்து.

கர்ப்பிணி பெண்களுக்கு செய்யப்படும் தைராய்டு ஹார்மோன் பரிசோதனையால், இல்லாத நோயை இருப்பதாக கருதுவதும், தேயைற்ற சிகிச்சையும் அளிக்கப்படுவதாக கனடாவில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

தைராய்டு சோதனையில் ஹார்மோன் அளவில் சிறு மாற்றத்தையும் நோயாக கருதி சிகிச்சை அளிக்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் இப்பிரச்னை தானேசரியாகிவிடும்.

உடல்நிலையை அரிய சோதனைகள் தேவைதான். ஆனால் முடிவுகள் அப்படியே எடுத்துக்கொண்டு பாதிப்பு இருப்பதாக கூறிவிட முடியாது எனவும் ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

newstm.in

Next Story
Share it