1. Home
  2. தமிழ்நாடு

கடைசி பந்தில் த்ரில் வெற்றி..! ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது ராஜஸ்தான்..!

1

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.ராஜஸ்தான் அணி  இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோல்வியடைந்து, 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், நடப்பு தொடரில் பிளே–ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக ராஜஸ்தான் இருக்கும்.

ஹைதராபாத் அணி 9 போட்டிகளில் விளையாடிய நிலையில், 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.  ஐபிஎல் வரலாற்றில் இந்த இரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.  அதில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளும் தலா 9 முறை வெற்றி பெற்றுள்ளன. 

இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.  

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், டிராவிஸ் ஹெட் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், அபிஷேக் சர்மா 12 ரன்களில் வெளியேறிய நிலையில், அடுத்து வந்த அனுமோல்ப்ரீத் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஐதராபாத் அணி 35 ரன்களுக்கு முக்கிய 2 விக்கெட்டகளை இழந்தது.

இதனைத் தொடர்ந்து 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹெட் – நித்தீஷ் ரெட்டி இருவரும் அதிரடியாக விளையாடி ரன்க்ள சேர்த்தனர். ஒருமுனையில் நித்தீஷ் சிக்சர்களாக விரட்ட, ஹெட் பவுண்டரிகளாக விரட்டி ரன்கள் எடுத்தனர். அணியின் ஸ்கோர் 131 ரன்களில் அரைசதம் கடந்த டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்தார். 44 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 58 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்தது.

அடுத்து களமிறங்கிய ஹென்றி க்ளாசன் தனது பங்குக்கு அதிரடியில் இறங்கிய நிலையில், சிக்சர்களாக பறக்கவிட்ட நித்தீஷ் ரெட்டி அரைசதம் கடந்து அசத்தினார். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. 

தொடர்ந்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் வகையில், தான் சந்தித்த முதல் பந்திலேயே பட்லர் டக் அவுட் ஆனார். அதன்பிறகு களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 3 பந்துகளை சந்தித்து ரன் கணக்கை தொடங்காமலே வெளியேறினார். இதனையடுத்து 3-வது விக்கெட்டுக்கு இணைந்த ஜெய்ஸ்வால் – ரியான் பராக் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது.

இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்த நிலையில், 4-வது அணியின் ஸ்கோர் 13.3 ஓவர்களில் 135 ரன்களை எட்டியபோது ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். 40 பந்துகளை சந்தித்த அவர் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 67 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து அசத்தியது. அடுத்து களமிறங்கிய ஹெட் மயர் 13 ரன்களிலும், துருவ் ஜேரல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்த நிலையில், அரைசதம் கடந்த பராக் 49 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்சருடன் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

வெற்றியை நோக்கி வலிமையாக முன்னேறிய ராஜஸ்தான் அணி இறுதிக்கட்டத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. கடைசி 12 பந்துகளில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில், 19-வது ஓவரை வீசிய கேப்டன கம்மின்ஸ் ஒரு விக்கெட் வீழ்த்தியதுடன் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. புவனேஷ்வர் குமார் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் அஸ்வின் ஒரு ரன் எடுத்தார்.

2-வது பந்தில், 2 ரன்கள் எடுத்த பவல் 3-வது பந்தை பவுண்டரிக்கும், 4-வது மற்றும் 5-வது பந்தில் தலா 2 ரன்களும் எடுத்தார். இதனால் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில், கடைசி பந்தை சந்தித்த பவல் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்ததால், ஐதராபாத் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

Trending News

Latest News

You May Like