1. Home
  2. தமிழ்நாடு

இன்று நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு..!

1

நாட்டில் 18-வது பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வாக்குப்பதிவு ஜூன் 1ம் நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஞானேஸ்குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கூறியதாவது. 

நடந்து முடிந்த தேர்தலில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக பல அரசியல்கட்சி தலைவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. பலருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.  சரியாக செயல்படாத அதிகாரிகள் மாற்றப்பட்டனர். தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பான புகார்களில் 90% மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு முடித்துவைக்கப்பட்டுள்ளது.  போலி செய்திகளை தொடர்ந்து தேர்தல் ஆணையம் தனது சமூக வலைதள பக்கங்களின் மூலமாக முறியடித்தது.

இன்று நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்காக மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  24 மணி நேரமும் சிசிடிவி காட்சிகள் பதிவு செய்யப்படும். தேர்தல் பார்வையாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள்.  படிவம் 17 சி வழங்கப்பட்டுள்ளது.  தேர்தல் முடிவுகளை அங்கு அமைக்கப்பட்ட தேர்தல் முகவர்களிடம் காட்டப்படும்.

படிவம் 20ல் தேர்தல் பார்வையாளர் கையொப்பமிடுவார். வாக்கு எண்ணிக்கை அதிகாரியும் அங்கு இருப்பார். ஒவ்வொரு சுற்று முடிவுகளும் உடனுக்குடன் வெளியிடப்படும் இதன் விவரங்கள் ஊடகங்களுக்கு வழங்கப்படும். ஐந்து வாக்குகள் ஒப்புகைச் சீட்டுடன் பொருத்தி பார்க்கப்படும். அனைத்து நடவடிக்கைகளும் சிசிடிவி கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்படும்

வாக்கு பதிவு எந்திரத்தின் கண்ட்ரோல் யூனிட் செயல்பாடுகள் சிசிடிவி கேமராக்கள் மூலமாக பதிவு செய்யப்படும் நேரம் சரிபார்க்கப்படும். எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடிகிறது என்ற விவரங்கள் முகவர்களுக்கு தெரிவிக்கப்படும். இவை வாக்கு எண்ணிக்கை அதிகாரியாலும் சரி பார்க்கப்படும் கட்சியின் பெயர் வாக்காளர் பெயர் என்ன அத்தனையும் தெரிவிக்கப்படும். இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like