10ம் வகுப்பு மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த 3 பேருக்கு மரண தண்டனை..!
மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தின் ராஜ்கன்ஜ் பகுதியில், கடந்த 2020ம் ஆண்டு 15 வயதான மாணவியை, குற்றவாளிகளில் ஒருவன், இரண்டு நண்பர்கள் உதவியுடன் கடத்தி சென்று பலாத்காரம் செய்து கொலை செய்தனர். உடலை கழிவுநீர் தொட்டியில் போட்டு மறைத்தனர். இது தொடர்பாக 20 முதல் 27 வயதான 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது ஆட்கடத்தல், பலாத்காரம், கொலை, ஆதாரத்தை அழித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இது தொடர்பாக சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டனர். விசாரணை முடிவில் 3 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.