கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..,!

விருதுநகர் காரிசேரி அருகே மாரியம்மன் கோவிலில் இன்று திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவிற்காக, திருப்பதி 28, என்பவர் மைக் செட் அமைத்து, அதற்கான பணியில் ஈடுபட்டிருந்தார்.
அவர், மைக்செட் வயர் கட்டியபோது எதிர்பாரதவிதமாக, உயர் மின்னழுத்த மின்கம்பி மீது மைக் வயர் செட் பட்டதால், மின்சாரம் பாய்ந்ததில், மைக்செட் உரிமையாளர் திருப்பதி, 7 மாத கர்ப்பிணியான அவர் மனைவி லலிதா 25, மற்றும் பாட்டி பாக்கியம் 65, ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். அவர்களை காப்பாற்றச்சென்ற இருவர் காயமடைந்தனர்.காயமடைந்த இருவரும் திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்த ஆமத்துார் போலீசார் மின்சாரம் தாக்கியது குறித்து விசாரனை செய்து வருகின்றனர்.