1. Home
  2. தமிழ்நாடு

துக்க வீட்டில் பறிபோன மூன்று உயிர்கள்.. கோவையில் நடந்தது என்ன?

1

கோவை கணபதி சேர்ந்தவர் மூதாட்டி ராமலட்சுமி (85). இவர் கடந்த வியாழக்கிழமை இரவில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது, உறவினர்கள் ஒவ்வொருவராக அஞ்சலி செலுத்த வந்து கொண்டிருந்துள்ளனர்.

தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலையும் துக்க நிகழ்விற்காக அவரது வீட்டிற்கு ஏராளமானோர் வருகை புரிய தொடங்கினர். இந்த நிலையில் அன்றைய தினம் காலை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், அந்த ப்ஃரீசர் பாக்ஸுக்கு ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் கொடுக்கப்பட்டது. அப்போது ஓடிக்கொண்டிருந்த ஜெனரேட்டரில் பெட்ரோல் ஊற்றப்பட்டது.

அப்போது, திடீரென எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக வீட்டினுள் புகை சூழ்ந்ததால் உடனடியாக வீட்டிற்குள் இருந்த பலரும் வெளியேறினர். அப்போது, அந்த அறையில் இருந்த பத்மாவதி, பானுமதி ராஜேஸ்வரன், ஸ்ரீராம் ஆகிய நான்கு பேர் மாட்டிக் கொண்டனர். அவர்களை மீட்டபோது பலத்த தீக்காயம் அடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.

இதையடுத்து, உடனடியாக நால்வரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, மருத்துவமனைக்குச் செல்லும்போது வழியிலேயே பத்மாவதி என்பவர் உயிரிழந்தார். பத்மாவதி மூதாட்டி ராமலட்சுமிக்கு மருமகள் ஆவார்.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பானுமதி (55) மற்றும் ராஜேஸ்வரன் (53) ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சரவணம்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துக்க வீட்டுக்குச் சென்ற நிலையில், மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like