1. Home
  2. தமிழ்நாடு

18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 3 பேர் கைது..!

1

செங்கல்பட்டில் அருள்தாஸ் மற்றும் அவரது மகள் பிரியா ஆகியோர் காப்பகத்தை நடத்தி வந்துள்ளனர். இந்த தனியார் காப்பகத்தில் பெற்றோரை இழந்த 40 சிறுமிகள் தங்கிப் படித்து வருகின்றனர். இதில் 18 சிறுமிகளுக்கு அந்த விடுதியுடைய உரிமையாளரின் கார் ஓட்டுநர் பழனி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இது குறித்து காப்பகத்தின் உரிமையாளர் அருள்தாசிடம் சிறுமிகள் பலமுறை கூறியும், பழனி மீது எந்த நடவடிக்கையையும் அவர் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், அந்தக் காப்பகத்திற்கு மாவட்ட குழந்தை நல அலுவலகர்கள் ஆய்வுக்குச் சென்றுள்ளனர். அப்போது பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து குழந்தை நல அலுவலகர் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அந்த காப்பகத்திற்கு வந்த போலீசார் கார் ஓட்டுநர் பழனியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் சிறுமிகள் புகார் அளித்ததை மறைத்ததாக காப்பக உரிமையாளர் அருள்தாஸ், அவரது மகள் பிரியா ஆகியோரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவல் நிலையத்து அழைத்து சென்றனர்.

விசாரணையின்போது, அருள்தாசிற்குத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரியா, பழனியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காப்பகத்தில் மீதம் உள்ள குழந்தைகளுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like