பைக்கில் அசால்ட்டாக போதைப் பொருள் கடத்திய மூன்று பேர் கைது!

சென்னையில் இருசக்கர வாகனத்தில் போதைப் பொருள் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவான்மியூர் காவல் நிலைய ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஜெயந்தி திரையரங்கம் அருகில் கண்காணிப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது,சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பைக்கில் 3 பேரை நிறுத்தி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.
சந்தேகம் அதிகரிக்கவே, அவர்களது இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில் MDMA (Methylene Dioxy Methamphet Amine) என்ற போதை பவுடர் இருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், போதை பவுடரை கடத்தி வந்த ராயபுரத்தை சேர்ந்த உசேன் (36), பனையூரை சேர்ந்த மதி (35), திருவொற்றியூரை சேர்ந்த ஆசிப் ராஜா (21) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து சுமார் 70,000 ரூபாய் மதிப்புள்ள 13 கிராம் எடை கொண்ட MDMA போதை பவுடர், 3 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 15,500 ரூபாய் பணமும் பறிமுதல் செய்தனர்.
newstm.in