மது விருந்துடன் பாம்பை சமைத்து சாப்பிட்ட மூவர் கைது.. வைரலாகும் வீடியோ !

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தங்கமாபுரிபட்டணம் பகுதியில் இளைஞர்கள் சிலர் மதுவிருந்தில் ஈடுபட்டனர். அவை தொடர்பான வீடியோ பரவி இப்போது பெரும் சிக்கலில் மாட்டியுள்ளனர்.
காரணம் அந்த வீடியோவில் பாம்புகறி சமைத்து சாப்பிட்டது தான். அந்த வீடியோவில், 6 அடி நீளமுள்ள பாம்பை இருவர் துண்டு துண்டாக வெட்டுகின்றனர். பின்னர் அதனை சமைத்து சாப்பிட, ஒரு கிலோ கடலை மாவு வாங்கி வரும்படி, மற்றொரு இளைஞரிடம் கூறுகிறார்.
பின்னர் பாம்புவை சமைத்து முடித்து அதனை மது குடித்துக் கொண்டே இளைஞர்கள் சாப்பிடுகின்றனர். இதுபற்றி மேட்டூர் வனத்துறையினர், தங்கமாபுரிபட்டணம் சென்று விசாரணை நடத்தினர். அதில், சுரேஷ் (32), முகமது உசேன் (22), ஜெயா (23) எனத்தெரியவந்தது. அந்த 3 பேரையும் வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நேற்று முன்தினம் அங்குள்ள சிவக்குமார் என்பவரது வீட்டினுள் சாரைப்பாம்பு புகுந்துள்ளது. அதனை சுரேஷ் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து பிடித்துள்ளனர். அதனை கொன்று வீசிச்செல்ல மனமில்லாமல் சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேர் மீதும், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவர்கள் மூன்றுபேரும் சாரை பாம்புவை துண்டு துண்டாக வெட்டி சமையல் செய்து சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
newstm.in