தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பேர் கைது..!

திருப்பரங்குன்றம் மலை முருகப் பெருமானுக்கு சொந்தமானது. அதில் அமைந்துள்ள தர்கா ஒன்றை காரணம் காட்டி, மலையில் ஆடு, கோழி வெட்ட இஸ்லாமிய அமைப்பினர் முயற்சிக்கின்றனர். இதற்கு பக்தர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்து முன்னணி சார்பில், இன்று திருப்பரங்குன்றம் மலையை காக்கும் அறப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.இதை தடுக்கும் நோக்கத்துடன், போலீசார், மாநிலம் முழுவதும் கைது, வீட்டுக்காவல் நடவடிக்கை எடுத்து பா.ஜ., இந்து முன்னணி தொண்டர்களை அடைத்து வைத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். திருப்பூரில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், நுாற்றுக்கணக்கான தொண்டர்களுடன் கைது செய்யப்பட்டார்.
நெல்லையில் இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றால நாதன் கைது செய்யப்பட்டார். வெவ்வெறு இடங்களில் ஊர்வலமாகவும், தனித்தனியாகவும் திருப்பரங்குன்றம் புறப்பட்ட ஆயிரக்கணக்கான பா.ஜ., இந்து முன்னணி தொண்டர்கள், ஆங்காங்கே மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.