1. Home
  2. தமிழ்நாடு

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

1

மதுரையில் தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியது: “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் உண்மையான தேவை உடையவர்கள் யாராக இருந்தாலும் விடுபட்டு விடக்கூடாது என்பதே தமிழக முதல்வரின் நோக்கம். இத்திட்டத்தில் விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு உண்டு. மகளிர் உரிமைத் தொகை பெற முழு தகுதியிருந்தும் ஏதோவொரு காரணத்தால் விடுபட்டிருந்தால் அவர்களது குறைகளை தீர்ப்பதற்கு ஒரு அமைப்பு முறையை உருவாக்க தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி தாலுகா அளவில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விண்ணப்பிக்காதவர்கள், விடுபட்டவர்கள் உதவி மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம். உதவி மையங்களின் தொலைபேசி எண்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்படும். இத்திட்டத்தில் ஏழைகள் யாரும் தவிர்க்கப்படவில்லை. யாருக்கெல்லாம் தேவை இருக்கிறதோ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

 மகளிர் உரிமைத் தொகை பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில், ''குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வங்கிக் கணக்கில் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நேற்று தங்களால் துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று குடும்பத் தலைவிகள் தெரிவித்துள்ளனர்.

வங்கிகள், சேமிப்புக் கணக்கு அல்லது நடப்பு வங்கிக் கணக்கு வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் குறைந்தபட்ச தொகை (Minimum Balance) இல்லாவிட்டால் தற்பொழுது தமிழக அரசு அவர்களது வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ள ரூபாய் 1000/-ல் இருந்து குறைந்தபட்ச தொகை இல்லாததற்கான தண்டத் தொகையும், குறுஞ்செய்தி அனுப்பியதற்கான தொகையையும் வங்கிகள் அவர்களது கணக்கிலிருந்து எடுத்துக் கொள்கின்றன. இதனால், சம்பந்தபட்ட குடும்பத் தலைவிகள் ஆயிரம் ரூபாயை முழுமையாக பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது அவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தங்களது வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச தொகையை வைக்க முடியாதவர்கள் ஒவ்வொரு மாதமும் இந்த சிரமத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். இதனால், அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகை முழுமையாக அவர்களுக்கு கிடைக்காமல் போய்விடும்.

Trending News

Latest News

You May Like