1. Home
  2. தமிழ்நாடு

கோவையின் இந்த பகுதிகளில் செல்பவர்கள் கவனமாக இருக்கவும்!

Q

நேற்று இரவு தடாகம் அருகே உள்ள கரடிமடை பிரிவு, மங்களபாளையம் பகுதியில் மூடப்பட்டுள்ள செங்கல் சூளை அருகே விவசாயி ஒருவர் கால்நடைகளுக்கு கொடுக்கும் தீவனத்தை உலர வைத்து இருந்தார். அப்போது அங்கு குட்டியுடன் ஐந்து யானைகள் கூட்டமாக வந்து அந்த தீவனத்தை ருசி பார்த்தது. அந்தவழியே ரோந்து வந்த வனத்துறையினர்,அவர்கள் வந்த வாகனத்தில் ஒலி எழுப்பியபடி வந்தனர். அந்த சத்தம் கேட்டு, அங்கு இருந்து யானைகள் வனப்பகுதிக்கு ஓடின.
காட்டு யானைக் கூட்டத்தின் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இருட்டுப்பள்ளம், வளையான்குட்டை, முண்டாந்துறை ஆகிய ஊர்களுக்குச் இருசக்கர வாகனம் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறும், தனியாக நடந்து செல்வதை தவிர்க்குமாறும் வனத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுவதாக பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like