இதயம் பலகீனமானவர்கள் இந்த செய்தியை படிக்க வேண்டாம்..!
சென்னை திநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருபவர் வர்ஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 24 வயதுடைய இவர் ஐடி கம்பெனியில் பணியாற்றி வரும் மதுரையை சேர்ந்த செல்வமணி (29) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.இதையடுத்து இவ்விருவரும் திருமணம் செய்யமாலேயே நெருக்கமாக பழகி வந்ததாகக் கூறப்படும் நிலையில், வர்ஷா கர்ப்பமாகியுள்ளார். இதற்கிடையே, ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த வர்ஷாவிற்கு, கடந்த செவ்வாய்க்கிழமை அதிக அளவில் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
அது பிரசவ வலி என்பதை உணர்ந்த அவர், தங்கியிருக்கும் விடுதியில் உள்ள கழிப்பறைக்கு சென்றார். அவர் வலியில் துடிக்க, வயிற்றில் இருந்து சிசு வெளியே வர தாமதமானது.இதனால், செய்வது அறியாமல் தவித்த அவர், சிசுவை வெளியே இழுக்க முயற்சி செய்தார். கழுத்து, உடல் வந்த நிலையில், கால்கள் சிக்கிக் கொண்டன. இதையடுத்து அவர், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்தியால் முதலில் கழுத்தில் வெட்டினார். பின், முட்டிக்கு கீழே இரு கால்களையும் துண்டாக்கினார்.
இதையடுத்து, ஒரு காலை மட்டும் கழிப்பறையில் போட்டு தண்ணீர் ஊற்றினார். சிசுவின் ஒரு கால் மற்றும் உடலை துணியில் சுற்றி, அங்கிருந்த குப்பை தொட்டியில் போட்டதும், அவர் திடீரென மயக்கமடைந்தார். சில மணி நேரத்திற்கு பின், கழிப்பறைக்கு சென்றவர்கள் இதை பார்த்ததும், மருத்துவமனைக்கு தகவல் அளித்தனர்.
அதன் ஊழியர்கள், ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து, செவிலியர் மற்றும் இறந்த குழந்தையின் உடல் பாகங்களை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இறந்த குழந்தையின் சடலத்தை பத்திரப்படுத்திய மருத்துவர்கள், வர்ஷாவை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து வர்ஷாவிற்கு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், தியாகராய நகர் போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு, குழந்தையின் உடலை மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை அறைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது வர்ஷாவிடம் தியாகராய நகர் காவல்நிலையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.