இந்திய கூட்டணியில் இருப்பவர்கள் சேர்ந்து பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள் : ஈ.வி.கே.எஸ். பேட்டி..!

ராகுல்காந்தி,ஸ்டாலின் உள்ள இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையத்தில் தவறு செய்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் நிற்க வைக்கப்படுவார்கள். பெரியாருக்கு எதிராக தியானம் யாகம் செய்த மகாராஜா முடிவதற்குள் உயிரிழந்துவிட்டார்.எனவே யாகமும் தியானமும் செய்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
காந்தியை 1982 முன்பு தெரியாது என கூறும் மோடி இந்தியாரா? டீ ஆற்றுவதிலேயே கவனமாக இருந்திருப்பார்.எனவே இந்த தேர்தலில் மோடியை மக்கள் தூக்கி எறிவார்கள்.ஒட்டுமொத்த தமிழர்களை திருடர்கள் என சொல்லியதை ஏற்றுக்கொள்ள முடியாது.தமிழர்களை திருடர்கள் என கூறிவிட்டு அடுத்த முறை தமிழகம் வரும்போது எப்படிப்பட்டவர்கள் என மக்கள் காட்டுவார்கள்.ஜெயலலிதா படித்த பள்ளியில் உள்ள தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி ஜெபம் செய்துள்ளார்.பைபிளின் மகத்துவத்தை பேசியுள்ளார்.ஜெயலலிதா எம்மதமும் சம்மதம் என்ற கொள்கை உடையவர்.எனவே அவரை குறுகிய வட்டத்திற்குள் அடைக்க அண்ணாமலை முயற்சிப்பது என்பது அவருடைய அறியாமை காட்டுகிறது.
கஞ்சா குடிப்பது வெகு நாட்களாக இருக்கிறது.அந்த காலத்தில் இருந்து கஞ்சா குடிப்பவர்கள் அதிகமாகவும் ஒதுக்குப்புறத்தில் கஞ்சா பயிரிடுவது சகஜமாக இருந்தது.தற்போது கஞ்சா பயன்படுத்துவது என்பது தமிழகம் மட்டுமின்றி பஞ்சாப் மாநிலத்தில் பெண்கள் உள்பட அடிமையாகியுள்ளனர்.கஞ்சா பழக்கம் ஆதியில் இருந்து இருக்கிறது.இதனை யாரும் மறுக்க முடியாது.எனவே தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தை முதல்வர் கண்டிப்பாக ஒழிப்பார்.
ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள குறைபாடுகள் குறித்து அமைச்சர் முத்துசாமியிடம் பேசியுள்ளேன்.விரைவில் நடவடிக்கை எடுப்பார். தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணியில் இருப்பவர்கள் சேர்ந்து பிரதமர் யார் என்பதை முடிவெடுப்பார்கள்.கண்டிப்பாக ராகுல் காந்தியும், மு.க. ஸ்டாலினும் நினைப்பவர்கள் பிரதமராக வருவார்கள்.பிரதமர் ஆண்டிற்கு ஒருவர் என 5 ஆண்டிற்கு வருவது என்பது வராது. அப்படி வந்தாலும் ஒன்றும் நஷ்டம் இல்லை.
4-ந் தேதிக்கு பிறகு அ.தி.மு.க எங்கு இருக்கும் என அண்ணாமலை பேசியதற்கு 4-ந் தேதிக்கு பிறகு அண்ணாமலை தமிழகத்தில் இருப்பாரா என உறுதி செய்தபிறகு மற்றவர்களை பற்றி பேசலாம்.தமிழக அரசின் மின்சார கொள்கையில் உள்ள குழப்பங்கள் இருப்பதால் ஒருமித்த கருத்து எடுக்கவேண்டும். இதற்கு விரைவில் முதல்வர் குறைகளை நிவர்த்தி செய்வார். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர் எம் பழனிச்சாமி ஈரோடு பொறுப்பாளர் திருச்செல்வம் சிறுபான்மை பிரிவு பாட்ஷா முகமது அரசத் மண்டல தலைவர் ராஜேஷ் ராஜப்பா உட்பட பலர் உடன் இருந்தனர்