தூத்துக்குடி மதுப்பிரியர்களுக்கு ஷாக்..! வரும் 10ம் தேதி மதுக்கடைகள் மூடல் – அரசு உத்தரவு!
தமிழகத்தில் முக்கிய பண்டிகைகள் மற்றும் தலைவர்களின் நினைவு தினம் ஜெயந்தி ஆகிய நாட்களை முன்னிட்டு சட்டம் ஒழுங்கு நிலைநாட்டு நோக்கில் மது கடைகள் மூடப்படும். அந்த வகையில் வரவிருக்கும் 10ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 75 மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தேவேந்திர குல வேளாளர் இளைஞர் கூட்டமைப்பு என்ற கட்சியை உருவாக்கி அதன் நிறுவன தலைவராக இருந்தவர் பசுபதி பாண்டியன். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவரது நினைவு தினம் ஆண்டுதோறும் தூத்துக்குடி மாவட்டத்தில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள சுமார் 75 மதுபான கடைகளை அன்றைய தினம் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.