1. Home
  2. தமிழ்நாடு

ரயில்வே கிராசிங் பாதையை மூடும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்

ரயில்வே கிராசிங் பாதையை மூடும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்


தூத்துக்குடி மாவட்டம் அருகேயுள்ள செம்பூர் கிராமத்தில், ரயில்வே கிராசிங் பாதையை மூடும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் அருகேயுள்ள செம்பூர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். பின்னர், இதுதொடர்பாக அந்த ஊரைச் சேர்ந்த பிரதிநிதிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில், செம்பூர் கிராமத்தில் சுமார் 2000 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் ரயில்வே கிராசிங்கை மத்திய அரசு தற்போது நிரந்தரமாக மூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரயில்வே கிராசிங் பாதையை மூடும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்

இதை மத்திய அரசு மூடினால் எங்கள் ஊரைச் சேர்ந்த பொது மக்களுக்கு அத்தியாவசிய பணிகள் கடுமையாக பாதிக்கும். குறிப்பாக மருத்துவ தேவைகளுக்காக வெளியூர் செல்வதற்கும், பள்ளி கல்லூரி மற்றும் ஏணைய வழிபாட்டு தலங்களுக்கு செல்வதற்கு அந்த வழியையே எங்கள் கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மத்திய அரசு அந்த ரயில்வே கிராசிங்கை மூடினால் மாணவர்கள், பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். இதனால் மக்கள் கிட்டத்தட்ட மூன்று கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்படுவதால் சரியான நேரத்திற்கு செல்ல முடியாது. எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு ரயில்வே கிராசிங்கை மூடும் முடிவை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Trending News

Latest News

You May Like