1. Home
  2. தமிழ்நாடு

விமானி சொன்ன கடைசி வார்த்தை இது தான்..!

Q

'ஏர் - இந்தியா' விமானம் விழுந்து நொறுங்கியதற்கான காரணத்தை அறியும் பணிகள் நடந்து வருகின்றன. விபத்துக்கு சில வினாடிகளுக்கு முன், விமான கட்டுப்பாட்டு மையத்திற்கு அவசர கால உதவு கோரி விமானி தகவல் அனுப்பி உள்ளார்.
விபத்துக்கு முன், விமானி கூறிய ஆடியோ மெசேஜ் வெளியாகி உள்ளது. ''MAY DAY...MAY DAY...MAY DAY...NO POWER...NO THRUST...GOING DOWN...என விபத்துக்கு முன்னர் விமானி கூறியுள்ளார்.
'மே டே' என்பது விமானப்போக்குவரத்து மற்றும் கடல் வழி பயணத்தின்போது,ஆபத்தில் இருப்பதை வெளிப்படுத்தும் சங்கேத வார்த்தையாகும். இவ்வாறு மூன்று முறை 'மே டே' என அடுத்தடுத்து குறிப்பிட்டு, என்ன பிரச்னை என்பதையும் விமானி குறிப்பிட்டுள்ளார்.
'நோ பவர்' 'நோ திரஸ்ட்' 'கோயிங் டவுண்' என்பதை தெளிவாக அவர் குறிப்பிட்டுள்ளதை பார்க்கும்போது, விமானம் கீழே விழப்போவதை உணர்ந்து விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த தகவல் கிடைத்தவுடன், கட்டுப்பாட்டு அறையில் இருந்த அலுவலர்கள், விமானியை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். அதற்குள் விமானம் கீழே விழுந்து வெடித்து விட்டது.

Trending News

Latest News

You May Like