1. Home
  2. தமிழ்நாடு

இந்த துயர சம்பவம் வேதனையளிக்கிறது : தவெக தலைவர் விஜய்..!

1

மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் வான்படை சாகச கண்காட்சியை காண பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியதால் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மக்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளை தமிழக அரசு ஏற்பாடு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய் இந்த துயர சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார்..அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்    

சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.

இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். 


 

Trending News

Latest News

You May Like