1. Home
  2. தமிழ்நாடு

எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாது....பிரபல வில்லன் நடிகர் கண்ணீர் மல்க பேட்டி..!

Q

தனக்கு நடந்த அறுவை சிகிச்சை குறித்து உருக்கமாக பேட்டியளித்துள்ளார் நடிகர் பொன்னம்பலம்.

நான் உடல் நலம் பாதிக்கப்பட்ட போது முதன் முதலில் எனக்கு உதவி செய்தது சரத்குமார் சார் தான். பின் அவரே பலரிடம் சிபாரிசு செய்தார். அதன் பிறகு தான் கே.எஸ் ரவிக்குமார், தனுஷ், அர்ஜூன், சிரஞ்சீவி என பலரும் எனக்கு உதவி செய்தார்கள். அவர்கள் எவ்வளவு உதவி செய்தார்கள் என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால், என் மனசு நிறையும் அளவிற்கு உதவி செய்தார்கள்.

சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் அதை மாற்ற வேண்டும், இன்னும் ஒரு வருடம் தான் அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள். ஏன் என்றால், சிறுநீரக பாதித்தால், ஒவ்வொரு உறுப்பாக செயல் இழந்துவிடும். உலகத்திலேயே மிகவும் கொடுமையான தண்டனை டயாலிசிஸ் செய்வது தான். இந்த நிலைமை என் எதிரிக்கு கூட வரக்கூடாது. ஏன் இப்படி சொல்கிறேன் என்றால், ஒரு நாள் விட்டு ஒரு நாள், உடம்பில் இரண்டு ஊசி போட்டு உடம்பில் இருக்கும் ரத்தத்தை எடுத்துவிட்டு, டயாலிசிஸ் செய்வார்கள். இதற்காக கிட்டத்தட்ட 750 முறை நான் ஊசி போட்டு இருக்கிறேன். இதை நான், நான்கு வருடமாக செய்தேன், உண்மையில் கொடுமையான விஷயம் இதுதான்.

நான் தொடர்ந்த மது குடித்ததால் தான் இந்த நிலைமை என்கிறார்கள். ஆனால், அப்படி இல்லை. அதற்கு பின் வேறு காரணம் இருக்கிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மிகவும் கஷ்டப்பட்டேன். கடவுளின் புன்னியத்தில், நான் இப்போது நன்றாக இருக்கிறேன். எனக்கு மறுவாழ்வு கொடுத்தது சிரஞ்சீவி சார் தான், அவர் தான் எனக்கு கோடி கணக்கில் பணம் கொடுத்து உதவி செய்தார். 

இந்த நிலையில் நான் யாரையும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. இந்த வீட்டில் ஒரு உதவியாளருடன் நான் தனியாகத்தான் இருக்கிறேன். பண உதவி செய்து, பலர் எனக்கு உயிர் கொடுத்து இருக்கிறார்கள் அதுவே எனக்கு போதும் என பொன்னம்பலம் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

Trending News

Latest News

You May Like