1. Home
  2. தமிழ்நாடு

மழைக்காலத்தில் இதை தவிர்க்க வேண்டும் : மின் வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

1

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் கனமழை பெய்து கொண்டிருந்த போது சுந்தரம் என்பவரது வீட்டில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது.

அப்போது வீட்டில் இருந்த இரும்பு தூணை பிடித்த சுந்தரத்தின் மகன் குமார் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குமாரின் அக்கா அழகுமீனா தம்பியை காப்பாற்ற முயன்றுள்ளார். இதனால் அழகுமீனா மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் அக்கா தம்பி இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மழைக்கால மின் விபத்துக்களை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து TANGEDCO வெளியிட்டுள்ள பதிவில்,
1. காற்று மற்றும் மழைக்காலங்களில் மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கம்பிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம்.
2. மின் கம்பிகள் அருந்து விழுந்தால் அதன் அருகில் செல்லவோ, அதனை தொட முயற்சிக்கவோ கூடாது. அது குறித்து அருகிலுள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவும்.
3 இடி மின்னலின் போது வெட்ட வெளியிலோ, மரங்களின் அடியிலோ, மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் அடியிலோ தஞ்சம் புக வேண்டாம். கான்கிரீட் கூரையிலான பாதுகாப்பான கட்டிடங்கள் இல்லாத பட்சத்தில் தாழ்வான பகுதியில் தஞ்சமடையவும்.
4. இடி மின்னலின் போது டிவி, மிக்ஸி, கிரைண்டர், கணினி, கைப்பேசி மற்றும் தொலைபேசியை பயன்படுத்த வேண்டாம். திறந்த வெளியில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்க வேண்டாம்.
5. மின்மாற்றிகள் மற்றும் மின்பகிர்வு பெட்டிகள் அருகே தண்ணீர் தேங்கியிருக்கும் போது அதன் அருகே செல்ல வேண்டாம். அது குறித்து அருகிலுள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவும்.
6. மழையின் போது வீடுகளில் உள்ள சுவர்களில் தண்ணீர் கசிவு ஏற்படும் பகுதியில் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் அந்த பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை தவிர்க்கவும்.
7. மேல்நிலை மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்ட மின் வாரிய அலுவலர்களை அணுகவும்.
இந்த வழிமுறைகளை பின்பற்றினால், மழைக்காலத்தில் மின் விபத்துக்களைத் தவிர்த்து உங்கள் உயிரையும் உங்கள் குடும்பத்தினரின் உயிரையும் காப்பாற்றிக் கொள்ளலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Trending News

Latest News

You May Like