1. Home
  2. தமிழ்நாடு

அண்ணாமலை - உதயநிதி இந்த புகைப்படம் உண்மையல்ல ...ஏஐ தொழில்நுட்பம் மூலம் வெட்டி ஒட்டியுள்ளனர் - கரு.நாகராஜன்..!

1

சமீபத்தில் 78வது சுதந்திர தின விழாவை ஒட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில் அமைச்சர் எ.வ.வேலு - அண்ணாமலை இருவரும் சில நிமிடங்கள் தொடர்ந்து பேசியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அண்ணாமலை சந்தித்ததாக கூறி புகைப்படம் ஒன்று வைரலாகி கொண்டிருக்கிறது.

அதில் காரில் இருந்து இறங்கி இருவரும் கீழே நிற்கின்றனர். அண்ணாமலை இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்வது போலவும், ஒரு விரலை நீட்டி உதயநிதி ஸ்டாலின் எதையோ சொல்வது போலவும் காட்சி இடம்பெற்றுள்ளது. இப்படியான உரையாடல் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. நிச்சயம் ஏஐ தொழில்நுட்பம் மூலம் வெட்டி ஒட்டியுள்ளனர்.

 இதுதொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசுகையில், அதெல்லாம் காமெடியான படம். எடிட் பண்ணி தப்பா போட்றாங்க. இன்னும் வைரல் பண்ணாங்கண்ணா கம்ப்ளைன் தான் பண்ணனும்.

ரெண்டு பேரும் வணங்கறது, ஒருத்தரை ஒருத்தர் சந்திக்கிறது அரசியல்ல தப்பு கிடையாது. பொது இடங்களில் ரெண்டு தலைவர்கள் சந்திக்கும் போது எவ்வளவு பெரிய எதிரான கருத்துகள் கொண்டவர்களாக இருந்தாலும் கூட, ஒருத்தருக்கு ஒருத்தர் மகிழ்வோடு நட்பு பாராட்டி பேசுவது கைகொடுப்பதோ தவறு கிடையாது. இது நம்ம கலாச்சாரத்திற்கு எதிராக போகல. அதை தவறாக சித்தரித்து போடுவது தான் தவறு என்று கரு.நாகராஜன் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like