கண் திருஷ்டி படாமல் இருக்க இந்த ஒரு மரம் போதும்..கண் திருஷ்டி மாயமாகும்..!
திருமண வீடு என்றாலும் எந்த ஒரு சுப நிகழ்ச்சி என்றாலும் முதலில் வீட்டின் முன்பாக வாழை மரம் கட்டி வைப்பார்கள். வாழை குலையுடன் இருக்கும் அந்த மரம் அனைத்து கண் திருஷ்டிகளையும் போக்கும் என்பதனால்தான் நம்முடைய முன்னோர்கள் வாழை மரத்தை கட்டி வைப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.அதே போல வாழையடி வாழையாக வம்சம் தழைத்து ஓங்க வேண்டும் என்பதற்காகவும் திருமண வீட்டின் முன்பாக வாழை மரத்தை கட்டி வைப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். வாழை மரம் வளர்க்கும் வீடுகளில் கண் திருஷ்டி தாக்க வாய்ப்பு இல்லை.
கண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என்பதுதான் அதனுடைய அர்த்தம். ஒட்டுமொத்த பார்வையும் தன் மேல் விழுந்திருக்கிறது என்று சொல்வார்களே அதுதான். அந்தத் தெருவிலேயே பெரிய வீடு கட்டிவிட்டார்கள். அதனால் அந்தத் தெருக்காரர்கள் எல்லாம் போகும் போதெல்லாம் திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டுப் போவார்கள். அப்பொழுது என்ன செய்ய வேண்டுமென்றால், அவர்களுடைய ஒட்டுமொத்த சிந்தனையும், பார்வையும் எதிலாவது படும்படி ஒரு பொருளை அங்கு வைக்க வேண்டும். இதுதான் முக்கியம்.
சிலரெல்லாம் வாசலில் பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு மலர்களையெல்லாம் தூவி வைப்பார்கள். பார்ப்பவர்களுக்கு அதிலேயே அவர்களுடைய சிந்தனை போய்விடும். அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய சிந்தனை வராமல் போய்விடும். இதுபோன்ற எளிமையான சில பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது. இதில் குறிப்பாக தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்கக் கூடிய குணங்கள் நிறைய உண்டு. தொங்கும் தோட்டம் போன்றதெல்லாம் அமைக்கலாம். ரோஜா முட்கள் உள்ள செடி. அதுபோன்று முள் செடிகள் இருக்கும்படியும் வைக்கலாம். இந்த மாதிரி எளிய பரிகாரங்கள் நிறைய இருக்கிறது.
சிலரெல்லாம் பூசணிக்காயை கட்டித் தொங்க விடுவார்கள். சிலர், நாக்கு வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருக்கிற பொம்மையை வைத்திருப்பார்கள். சிலர் பிள்ளையாரை வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் கற்றாழையைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். இதுபோன்று சிலவற்றை செய்யலாம். இதெல்லாம் பயனுள்ளதாக இருக்கும். சாதாரணமாகப் பார்த்தீர்களென்றால் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கண் திருஷ்டிக்கு நல்ல பாதுகாப்பாக இருப்பார். சிலரெல்லாம் எல்லைத் தெய்வங்களோட படம், ஆயுதங்களோடு இருக்கக்கூடிய படத்தை வைத்திருப்பார்கள்.
ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்புவதற்கு ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே தொங்கவிடுவது நல்லது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக இயற்கைத் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் அது மிக மிகச் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்பப்பவே களைந்துவிடும். வாழைக்கு அந்த அருங்குணம் உண்டு. அதை வைத்தால் இன்னும் நல்லது.
வாழை பூக்கள் பரிகாரம்
பணக்காரர்களாக இருந்தவர்கள் கூட திடீரென வறுமையில் தள்ளப்படுவார்கள். வறுமை நீங்கவுட் கடன் பிரச்சினை நீங்கவும் வாழை பூக்கள் வைத்து சில பரிகாரங்கள் செய்யலாம். இந்த பரிகாரத்தை அமாவாசை திதியிலோ அல்லது தேய்பிறை அஷ்டமி திதியிலோதான் செய்ய வேண்டும். மூன்று வாழை பூக்களை எடுத்துக்கொள்ள வேண்டும் சூரியன் மறையும் நேரத்திலோ மாலை நேரத்திலோ கடலில் குளித்து விட்டு, தம் உடலில் உள்ள அனைத்து பகுதிகளிலும் படும்படி வாழை பூக்களை தடவ வேண்டும். ஆணாக இருந்தால் சட்டை அல்லது பனியன், பெண்ணாக இருப்பின் ஜாக்கெட், புடவை போன்ற துணியில் மூன்று பூக்களையும் கட்டி கடலில் வீசிவட வேண்டும். இப்படி செய்தால் வறுமை நீங்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும்.
பித்ரு தோஷம் நீக்கும் வாழைக்காய்
100 கிராம் கருப்பு எள்ளை வாங்கி அதை வெல்லத்துடன் கலந்து ஐந்து பாகங்களாக பிரிந்து, ஐந்து வெள்ளை துணியில் மூட்டை போல் கட்டிக் கொள்ள வேண்டும். பின்பு ஐந்து வாழைக்காய் எடுத்து, ஒவ்வொரு வாழைக்காயிலும் உள்ள காம்பில் ஒவ்வொரு எள் மூட்டையை மஞ்சள் நூலினால் கட்டி பித்ருக்களை வேண்டி அமாவாசை நாளில் கடலில் விட வேண்டும். இதன் மூலம் பித்ரு தோஷம் விலகும்.
வாழை மரத்தின் தண்ணீர்
ஞாயிற்றுக்கிழமைகளில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் வாழை மரத்தின் வேர் பகுதியில் இருந்து அறை அடிக்கு மேலே ஒரு மூங்கில் குச்சியில் குத்தினால் வாழை நீர் வழியும் அந்த நீரை மண் பாத்திரத்தில் பிடித்து கடல் நீருடன் கலந்து வீடுகளில், தொழில்கூடங்களில், நம்மீதும் தெளித்துக் கொண்டு வந்தால் வறுமைகள் விலகும். வாழை மரத்தை வெட்டினலோ அல்லது குத்தினாலோ அதிலிருந்து வடியும் நீர் கங்கை நதி நீருக்கு சமமானது.
சம்பள பணத்தையோ அல்லது சுப காரியத்திற்கு பயன்படுத்தப்பட இருக்கும் பணத்தையோ, வாழைப்பூ இதழில் வைத்து, வீட்டின் பூஜை அறையில் பூஜை செய்து பின் பயன்படுத்தினால் வீண் விரையம் மற்றும் செலவுகள் வராது. அதேபோல் புதிய தங்க நகை அல்லது வெள்ளி பொருட்களை வாங்கி வந்து, அதையும் வாழைப்பூ இதழில் வைத்து பூஜித்து எடுத்து கொண்டால் நம்முடைய தங்கமும், செல்வமும் பல்கி பெருகும்.
இன்றைக்கு பலரும் திருமணம் நடைபெறுவது சிரமமாக உள்ளது. திருமணம் தடைப்பட்ட பெண்கள் வாழைப்பூ இதழில் மூன்று குண்டு மஞ்சளை வைத்து முடித்து, வாழை நாரினால் கட்டி முடியிட்டு, வாழை மரத்தின் இலை, குலை தள்ளும் இடத்தில் வைத்து கட்டிவிட வேண்டும். அதைப்போல் ஆண்கள், குண்டுமஞ்சளுக்கு பதில் கொட்டைப்பாக்கு வைத்து கட்டி விட வேண்டும். மூன்று சஷ்டி திதிகளில் இது போல செய்துவந்தால் விரைவில் திருமணம் நடைபெறும்,
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் கடவுளுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும். வாழைமரக்கன்றை தானமாகக் கொடுக்கலாம். பின்பு கோயிலுக்கு வரும் பெண்களுக்கு வாழைப்பழங்களை தானமாகக் கொடுக்கலாம். ஒன்பது செவ்வாய்க்கிழமைகளில் இரட்டை வாழைப்பழத்தை கோவிலில் உள்ள ஏதாவது தெய்வத்திற்கு படைத்து, பின்பு வீட்டிற்கு எடுத்து வந்து அந்த பழத்தின் தோலில் உள்ள சதைப்பகுதியை கரண்டியால் சுரண்டி எடுத்து காய்ச்சிய பாலில் போட்டு சுத்தமான தேன் கலந்து கணவன், மனைவி இருவரும் சாப்பிட்ட பின்னர் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கர்ப்பிணிகள் வாழைப்பழத்தை பசுவிற்கு சாப்பிட கொடுத்தால் அவர்களுக்கு சுக பிரசவம் நிகழும் என்பது நம்பிக்கை.
.png)